சௌபாக்கியா எனும் 10 லட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைப்போம் எனும் தொனிப்பொருளில் அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் தேசியரீதியில் இடம்பெற்று வருகின்றன
இதற்கமைய சம்மாந்துறை விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு (23) சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல். பௌசுல் அமீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் எச்.எம்.சாஜித், விவசாய போதனாசிரியர்களான எம்.ஏ.எப். நுசைரா,கே.ஆர்.எப்.இம்லா தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான ஏ.ஆர்.எம். இர்சாத் ரி.ஜனனன் மற்றும் விவசாய குழுத்தலைவர்களும் வீட்டுத்தோட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விதைப்பொதிகள் வழங்கப்பட்டன. நெற்பயிர்ச்செய்கையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வயல் நில வரம்புகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளவென பயிர் விதைப்பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.