கணவரின் உருக்கமான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“நான் உங்கள் அனைவரையும் என் முழு இதயத்தோடும் நேசிக்கிறேன், நீங்கள் எனக்கு மிகச் சிறந்த ஒரு வாழ்க்கையைக் கொடுத்தீர்கள். கேட்டி, நான் சந்தித்ததிலேயே நீதான் மிகவும் அழகான, அருமையான பெண். நம் மகன் பிரெடெனிடம், அவன்தான் எனது மிகச்சிறந்த நண்பன் என்று, அவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.
நம் மகள் பெனெலோப்பிடம், அவள் ஒரு இளவரசி என்று, அவள் வாழ்க்கையில் என்னவெல்லாம் ஆசைப்படுகிறாளோ அவை எல்லாம் அவளுக்கு கிடைக்குமென்று சொல்.
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, உன்னையும் நம் பிள்ளைகளையும் நேசிக்கும் ஒருவரை நீ கண்டுபிடித்தால் அதுவும் எனக்கு மகிழ்ச்சிதான். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்”
என்று தனது கணவரான ஜான் அதில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கிறார் கேட்டி.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படும் இந்தச் செய்தி கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை குறித்த விவாததத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.