தேர்தல் ஆணையாளருக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் பதிலடி
சில நாட்களுக்கு முன் ஒரு வேட்பாளர் தேர்தல் ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார் அதில் ஊரடங்கு நேரத்திலும் மக்களை சந்திப்பதற்கு அனுமதியை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்
அதற்கு தேர்தல் ஆணையாளர் அனைத்து வேட்பாளர்களும் பொலிஸ் இராணுவத்தை அனுகி தாங்கள் மக்களை சந்திப்பதற்கு கிரமத்திற்கு செல்வதற்கான ஊரடங்கு அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தார்
எனவே பொலிஸ் இராணுவ அனுமதி பெற்றுத்தான் வேட்பாளர்கள் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அப்படி ஒரு ஜனநாயக விரோத தேர்தல் தேவை இல்லை
இராணுவ பொலிஸ் அடக்குமுறையை வைத்துக் கொண்டு நீதிக்கு புறம்பான தேர்தலை நடத்த முற்படுகிறதா இந்த தேர்தல் ஆணையகம் என்னும் சந்தேகம் எழுகிறது எனவே அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய முன்வர வேண்டும்
அதுவே இன்றைய தேவை கொரோனா அச்சத்தில் மக்கள் அல்லலுற்றுக் கொண்டு இருக்கும் போது அதற்கு இடையில் தங்களது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு முற்பட்டு நிற்கின்றது அரசு அதற்கு ஆதரவாக பிக்குகள் அணியிரும் திரண்டிருப்பது ஜனநாய செயற்பாடுகளுக்கு சாவுமணி அடித்தாற் போல் உள்ளது
ஒட்டு மொத்தத்தில் அராஜக ஆட்சிக்குள் நாடு சிக்கிகிருக்கும் இந்த நிலையில் எதிர் கட்சியில் இருக்கும் இந்த சிங்கள தேசிய கட்சிகள் அமைதி காப்பது பாரிய சந்தேகங்களை எழுப்பி வருகின்றது எனவே தேர்தல் ஆணையாளரின் ஜனநாயக மீறல்களுக்கு எதிராகவும் இந்த அரசின் ஜனநாயக மீறல்களுக்கு எதிராகவும் உடனடியாக நீதிமன்றத்தை நாடி உண்மையான உண்மையான நீதியை பெற்றுக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் முயற்சிக்க வேண்டும் என்று வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்