பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் கட்டாய எச்சரிக்கை தவறாமல் படிங்க..!

பேஸ்புக் வலைதளத்தில் கொரோனா தொற்று குறித்த வதந்தி, புரளி, தவறான செய்திகளை லைக் செய்த, கமென்ட் கொடுத்த பயனாளர்களின் பேஸ்புக் கணக்குகளை நீக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சமூக வலைதளங்களில் பேஸ்புக்கும் பிரபலமான ஒன்று. கொரோனா பற்றிய உண்மை செய்திகளை பதிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் உலகம் முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநில மற்றும் உள்ளாட்சி சுகாதார அமைப்புகளிடம் இருந்து பெறும் கொரோனா செய்திகளை பேஸ்புக் பதிவேற்றம் செய்து வருகின்றன. இதில் அசோசியேடட் பிரஸ்-ம் ஒன்றாகும். ஆனால் கொரோனா பற்றிய தவறான தகவல்கள், வதந்திகள், செய்திகளை பேஸ்புக் நிறுவனம் கண்காணிப்பதற்குள் அவை மிக வேகமாக பரவி விடுகிறது.

இதனை தடுக்கும் நடவடிக்கையாக பேஸ்புக் இதர நிறுவனங்கள், அமைப்புகளிடம் இருந்து பெற்ற கொரோனா செய்திகளை அதன் முகப்பு பக்கத்தில் உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்ற ஆங்கில தலைப்பில் வெளியிட்டு வருகிறது. இது தவிர, பயனாளர்கள் பதிவிடும் கொரோனா செய்திகளின் உண்மைத் தன்மை பேஸ்புக் கணக்கில் உள்ள கொரோனா தகவல்களுடன் சரிபார்க்கப்படுவதுடன், முடியாத பட்சத்தில், துணை நிறுவனங்களின் தகவல் களஞ்சிய உதவியுடன் சரிபார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கான சிகிச்சை, குணமளித்தல் உள்ளிட்ட விளம்பரங்களுக்கும் பேஸ்புக் தற்போது தடை விதித்துள்ளது. இவற்றினால் மட்டும் தவறான தகவல் பதிவிடப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆனாலும் கொரோனா எங்கு தோன்றியது, அதற்கான தடுப்பு மருந்துகள், ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட தவறான தகவல்கள் பதிவிடப்பட்டு ஆயிரக்கணக்கானோரால் தினமும் பார்க்கப்பட்டு லைக், கமெண்டுகளை அள்ளி குவிக்கின்றன. எனவே, உண்மை கண்டறியும் குழுவினரால் உலக சுகாதார அமைப்பால் தவறான செய்தி, தகவல் என்று அடையாளம் காணப்பட்ட செய்திகளை பதிவிடுபவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -