திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிக் கிளிப்பகுதியில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்காரணமாக உணவுப்பொருட்கள் இன்றி அவதிப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் வசிக்கும் பல குடம்பங்களைச் சேர்ந்த பலர் அன்றாட கூலித்தொழிலிலேயே ஈடுபட்டு வந்தனர் ஆனால் தற்போது நிலவும் ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களுக்கு கூலித்தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படாமையினால் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து உரியவர்கள் கவனத்தில் கொண்டு அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்குமாறு இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது இங்கு பாதிக்கப்பட்ட பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்....
நாங்கள் பல வருட காலமாக கூலி வேலை செய்து தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டாணநிலையினை தொடர்ந்து எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் நாங்கள் எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறோம்.ஒவ்வொரு குடும்பத்திலும் நாலு ஐந்து பேர் இருக்கிறார்கள் நாங்கள் சாப்பிடுவது எப்படி இது அரசாங்கத்தினால் எந்த வித நிவாரணமும் எமக்கு கிடைக்கவில்லை இந்நிலையில் நாங்கள் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.