கந்தளாய்,பேராறு முதலாம் குலனியைச் சேர்ந்த ஏ.ஜி.எம்.பஸால் கிழக்கு மாகாண சபையின் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி.வனிகசிங்க இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.
இவர் புதன்கிழமை(22) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த வருடம் இலங்கை நிருவாக சேவை தரம் முன்று போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவு செயப்பட்டு நிருவாக சேவை அதிகாரியானார்.
அதன் பின்னர் கொழும்பில் ஒரு வருட பயிற்சியைப் பூரத்தி செய்த பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கந்தளாயில் பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியை கந்தளாய் அல் தாரீக் மகா வித்தியாலயத்திலும்,உயர் கல்வியை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் கற்று பின்பு தனது பட்டப்படிப்பை களனிப் பல்கலைக் கழகத்திலும் பூர்த்தி செய்தார்.
பின்பு பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையிலே இவர் நிருவாக சேவை அதிகாரியானார்.
இவர் கந்தளாய் பேராறு பகுதியில் உள்ள பல சமூக சேவை அமைப்பின் உறுப்பினராக இருப்பதுடன் சமூக சேவையிலும் அதிக ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார்.
இவர் கந்தளாய் பேராறு பகுதியைச் எம்.அப்துல் கபூர்,ஜாரீயாஆகியோரின் கடைசிப் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.