பரீட்சை புள்ளிகள் வாழ்க்கையின் எல்லைகளை தீர்மானிப்பதில்லை.


னிதனாகப் பிறந்த நாங்கள் ஒவ்வொரு பருவங்களையும் கடக்கும் போது நமது அறிவை மேம்படுத்துவதற்காகவும் வாழ்க்கையின் சில பக்கங்களை படித்துத்துக்கொள்வதற்காகவும் முயற்சிக்கும் போது விரும்பியோ விரும்பாமலோ சில பரீட்சைகள், பயிற்ச்சிகள், போட்டிகள் என்பவற்றையும் கடந்து போகத்தான் வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதில் கிடைக்கும் வெற்றியோ தோல்வியோ வாழ்க்கைப் பயணத்தில் மற்றுமொரு பாதையை உருவாக்குமோ தவிர எல்லைகளாக முற்றுப்பெருவதில்லை.

நம்முன்னால் வாழ்ந்து சாதனை படைத்த எல்லோரும் கற்றுத் தேர்ந்தவர்கள் மாத்திரம் அல்ல பாடசாலை பக்கம் கூட காலடி படாதவர்கள்,படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என பலர் இருக்கிறார்கள் . அவர்கள் பாடசாலை கல்வியில் தோற்றுவிட்டோம் நமது வாழ்வின் எல்லை வந்துவிட்டது என்று பின்வாங்கவில்லை மாறாக கடந்து வந்த பாதையின் அனுபவத்தை கொண்டு புதிய பாதையில் வேகமாகவும், நிதானமாகவும் பயணித்து இன்று உலகம் போற்றும் சாதனையாளர்களாக திகழ்கிறார்கள்..

வெறுமென பாடசாலை கல்வியை மாத்திரம் முழுமை பெற முடியாது அனுபவம், தேடல்,ஒழுக்கம்,சமயம் என்று எல்லாம் சேரும்போதுதான் முழுமை பெற முடியும். நம்மை படைத்த இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு திறமைகளைத் தந்துள்ளான். யாருக்கும் எந்த திறமையும் இல்லாமல் இல்லை என்பது எனது நிலைப்பாடு.

எனவே பரீட்சையில் தோற்றுவிட்டோம் என்று பின்வாங்கிவிடக்கூடாது நமக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை முதலில் கண்டறிந்து அதனை மேம்படுத்தி அத்திறமையோடு அது சார்ந்த துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாகும்..

தன்னம்பிக்கையுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடரவுள்ள அனைத்து தம்பி ,தங்கைகளுக்கு எனது வாழ்த்துகள்..

எம்.பஹ்த் ஜுனைட்
ஊடகவியலாளர்.
காத்தான்குடி.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -