அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமான வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி பிரிவு பணிப்பாளர் பீட்டர் நவரோ நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
கடந்த January , February மாதங்களில், சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி குவித்தது. தேவையை விட 18 மடங்கு அதிகமாக வாங்கியது. முக கவசம் மட்டும் 200 கோடி எண்ணிக்கையில் கொள்முதல் செய்தது. இதற்கு சீன சுங்கத்துறையிடம் இருந்து எனக்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்த பொருட்களை சீனா பதுக்கி வைத்ததால், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு இவை கிடைக்காமல் தவிக்கின்றன. பதுக்கியதுடன், இந்த பொருட்களை சீனா அதிக விலைக்கு விற்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார்.