க.கிஷாந்தன்-
பத்தனை, மவுண்ட்வேர்ணன் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் பொழுது சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்வதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார் 29.04.2020 அன்று காலை சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து 45 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரையும், மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் ஆகியனவற்றையும் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.