டெல்லியில் உடன் படிக்கும் இந்து தோழி வீட்டில் இஸ்லாமிய நண்பிக்கு சஹர் உணவு!

எம்.எம்.நிலாமுடீன்-

லாக்டவுன் காரணமாக ஊருக்குப் போக முடியாத மாணவி தன்னுடைய தோழியின் வீட்டில் தங்க நேரிடுகின்றது.

டெல்லியில் தனது வீட்டில் உள்ள முஸ்லிம் பெண்ணுக்கு சஹர் உணவு சமைத்து கொடுத்த இந்து குடும்பம்..

ஊரடங்கு உத்தரவு மூலமாக தனது சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் டெல்லியில் உடன் படிக்கும் தோழி வீட்டில் தங்கி உள்ள இஸ்லாமிய பெண் நோன்பு வைக்க வேண்டும் என்று சொன்னதும் சஹருக்கு எழுந்து உணவு சமைத்து கொடுத்து பரிமாறும் இந்த குடும்பத்தினரின் முன்மாதிரியான நடவடிக்கை பாராட்டுக்குரியது.

எவ்வளவு அழகான அருமையான காட்சி ..மனிதம் சாகாது ! சாகவும் விடக்கூடாது! இந்த மாதரி இருந்த சமூகம்தான் இலங்கை தமிழ் முஸ்லிம் உறவு ! இப்போது அல்ல எப்போதும் ஈழத்தில் பார்க்க முடியாமல் ஆகி விட்டடது ..!

கொரோனா மனித நேயத்தை மிக பெரிய அளவில் வெளிபடுத்த வாய்ப்பு வழங்கி உள்ளது என்று சொல்லலாம் !

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -