நேற்று வெளியான கா.பொ.த. சாதரண தர பரீட்சையில் சிறந்த அடைவுகளை பெற்ற கோணாவத்தை மண்ணின் சொத்துக்களை ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ தொனிப் பொருளில் வீடு தேடி சென்று வாழ்த்தி பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இரவு CEO Addalaichenai அமைப்பின் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இதன் போது அந்த மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களையும், உயர்தர கற்கையின் போது அவர்கள் எவ்வாறு தத்தமது துறைகளை தெரிவு செய்ய இருக்கின்றார்கள் எனவும் கேட்டறிந்தும்,கலந்தாலோசித்ததும் இந்த கோணாவத்தை மண்ணுக்கு மீண்டும் மீண்டும் பல்துறையிலும் பெருமை தேடி தர வேண்டும் என வாழ்த்தி அவர்களுக்கான பரிசில்களை அவர்களது சார்பாக அவர்களது பெற்றோர்களிடம் கையளித்து சாதனை மாணவ செல்வங்களையும் அவர்களது பெற்றோர்களையும் வாழ்த்தி கெளரவித்திருந்தனர்.
மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான சாதனையாளர்களை அந் நூர் மகா வித்தியாலத்தில் அதிக அதிகமாக உருவாக்க எம்மாலான எல்லா வகையிலுமான உதவிகளை எமது CEO அமைப்பினூடாக செய்ய காத்திருக்கின்றோம் எனவும், அவர்கலது திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வான தேர்ச்சியடைய தவறிய மாணவர்களை தேடி சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கான அடுத்த கட்ட நகர்விற்கான ஆயத்தங்களையும் செய்து கொடுக்க இருப்பதாக குறித்த அமைப்பின் தலைவர் றியாஸ் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் எல்லா மாணவர்களும் சிறந்த மாணவர்கள்தான் இன்றைய சூழ் நிலையில் பாரிய சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான சாதனைகளும் பெறுபேறுகளும் இந்த மண் அடைய காரணமாக இருந்த மாணவ செல்வங்கள், பெற்றோர்கள், அதிபர், கற்பித்த அத்தனை ஆசிரியர்களும் இந்த இடத்தில் பாராட்டுக்குரியவர்கள் என்று நினைவு படுத்திய பொருலாளர் ஹலீம் எதிர் காலம் சிறக்க வாழ்த்தியிருந்தார்.
மேலும் இதன் போது பெறுபேறுகளை அடைய தவறிய மாணவர்களின் வளர்ச்சிக்கான அடுத்த நகர்வு பற்றியும், அவர்களுக்கான ஆலோசனைகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் பற்றியும் பேசிய செயலாளர் ஜெளபர் அஸாயிம் அவர்கள் நிலைமை சீரானதும் அதனை துரித படுத்தி செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவற்றை எல்லாம் நெறிப்படுத்திய இணைப்பாளர் ஆப்தீன் சம்சுதீன், லாபீர் ஹனீபா, சப்னாஸ் நாசர் அவர்களின் வாழ்த்துக்களோடு அங்கிருந்து விடை பெற்றனர்.
1.N.F. சப்றா 9A
2.MJF. சனாப் 6A, 3B
3.MF. றினோ 6A,B,2C
4.N.அப்றா 3A,3B,3C
அத்துடன் அட்டாளைச்சேனை கோணாவத்தையைச் சேர்ந்த ஹாபீழ் ஆசிரியரின் மகனான ஹாபீழ் அப்ஹாம் அஹமட் ஆங்கில மொழி மூலம் பரீட்சையில் தோற்றி 8A, B பெறுபேற்றினைப் பெற்று கோணாவத்தை கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். குறித்த மாணவனையும் இவ்வமைப்பினர் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.