COVID-19 எங்கள் பொருளாதாரங்களின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.


கய் றைடர், பணிப்பாளர் நாயகம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் 
பெரும் பரவல் தொற்று நோயாக உருவடுத்துள்ள COVID-19 இன் மனித பரிமானமானது முக்கிய சுகாதார சேவைகளில் மிகத் தொலைவில் காணப்படுகிறது. பொருளாதார, சமூக அபிவிருத்தி உட்பட எமது அனைத்து எதிர்கால நடவடிக்கைகளும் இதன் மூலம் பாதிப்புக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. எனவே இதற்கான எமது நடவடிக்கைகள் அனைத்தையும் அவசரமாகவும், ஒருங்கிணைந்ததாகவும் உலகளாவிய ரீதியில் மேற்கொள்வதோடு உதவி தேவைப்படுவோருக்கு உடனடி சேவைகளை வழங்குதலும் இன்றியமையாதது ஆகும்.
பணியிடங்களிலிருந்து நிறுவனங்களுக்கும், தேசிய மற்றும் உலகப் பொருளாதாரம் வரையில் இந்த உரிமையை நிலை நிறுத்துவது அரசாங்கம் மற்றும் சமூகங்களில் முன்னணியில் காணப்படும் தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குனர்களுக்கிடையில் இடம்பெறும் சமூகக் கலந்துரையாடல்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு மீண்டுமொரு 1930 களாக மாற்றமடையாமல் நாம் பாதுகாக்கலாம்.
ILO இன் மதிப்பீட்டின்படி 25 மில்லியன் மக்கள் தங்களது தொழில்களை இழப்பதற்கும் அதன் மூலம் அவர்களது 3.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தையும் இழக்க நேரிடலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொகை தாக்கத்தின் அளவைக் குறைத்து மதிப்பிடக்கூடும் என்ற விடயம் ஏற்கனவே தெளிவாகியுமுள்ளது.
இந்த நோய்த்தொற்று நிலையானது தொழிலாளர் சந்தைகளில் காணப்படும் சிக்கல் நிலைகளையும் கருணையின்றி வெளிப்படுத்தியுள்ளது. எல்லா அளவையுடைய நிறுவனங்களும் தங்களது தொழில் நடவடிக்கைகளை ஏற்கனவே நிறுத்தியும், தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்தும் பணியிலிருந்து பணி நீக்கம் செய்தும் உள்ளது. கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படுதல், விமான மற்றும் ஹோட்டல்களின் முன்பதிவுகள் இரத்துச் செய்யப்படுதல் மற்றும் தொலைதூரங்களில் இருந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளினால் பலர் சரிவின் விளிம்பில் காணப்படுகின்றனர்.

பெரும்பாலும் தொழில்களை இழக்கக்கூடிய கூட்டத்தாரில் முதல் நிலையாகக் காணப்படுபவர்கள் ஏற்கனவே தற்காலிக தொழில்களை மேற்கொள்பவர்களான வியாபார எழுதுவினைஞர்கள் , உணவு விடுதிப் பணியாளர்கள், சமையலறை ஊழியர்கள் , பொதிகளைக் கையாள்பவர்கள் மற்றும் துப்புரவுத் தொழில்களை மேற்கொள்வோர்கள் ஆகியோர் காணப்படுகின்றனர்.
தொழிலற்றுப்போன நிலையில் ஒருவருக்கு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள் ஐந்தில் ஒருவருக்கே கிடைக்கும் இவ்வுலகில், பணி நீக்கமானது மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு பேரிடரை ஏற்படுத்துகின்றன. இதற்கான காரணம் யாதெனில் , பல பராமரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு ஊதியத்துடனான சுகயீன விடுமுறை வசதிகள் காணப்படுவதில்லை – நாம் எப்போதும் நம்பியிருக்கும் இந்தக் குழுவினருக்கு- அவர்களது உடல்நிலை சரியானதாகக் காணப்படாவிட்டாலும் கூட தொடர்ந்தும் பணியில் ஈடுபட வேண்டிய அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வளர்ந்து வரும் இவ்வுலகில் துண்டு- தொகை தொழிலாளர்கள், நாளாந்த ஊதியத்தைப்பெறும் தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா வர்த்தகங்களில் ஈடுபடுவோர் போன்றவர்கள் இதே நிலைமையில்தான் காணப்படுகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்படக்கூடியவர்கள் நாங்களுமே. இந்நிலையானது வைரசின் பரவலை அதிகரிப்பது மாத்திரமல்லாமல் நீண்டகால வறுமையின் சுழற்சியையும் ஏற்றத்தாழ்வையும் மேலும் உண்டுபண்ணும்.
வியாபார நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக பணி நீக்கங்களை தடுப்பதற்காகவும் அரசாங்கங்கள் தீர்க்கமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின் மில்லியன் கணக்கான தொழில்களையும் வியாபார நடவடிக்கைகளையும் பாதுகாப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிட்டும். இன்று அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இனி வரப்போகும் காலங்களின் சமூக மற்றும் பொருளாதார ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதியியல் மற்றும் நாணயக் கொள்கைகளை விரிவாக்கம் செய்வதானது தற்போது தலைகீழ் சரிவாகக் காணப்படும் நீடித்த மந்த நிலையை தடுத்து நிறுத்துவதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். வார இறுதியிலும் இதற்கு அடுத்த நாட்களிலும் மக்கள் தங்களது பைகளில் போதுமான அளவில் பணத்தினைக் கொண்டிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இதன் அர்த்தம் யாதெனில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வருமான மூலங்களான – நிறுவனங்கள்ää இந்தக் கூர்மையான சரிவின் போதும் மிதக்கக்கூடிய தன்மையை உறுதிப்படுத்துவதும், நிலைமை சீரானதும் மீண்டும் தொடங்குவதும் என்பதாகும். குறிப்பாக அதிகம் பாதிப்படையக்கூடிய நிலையில் காணப்படும் தொழிலாளர்களான சுய தொழிலாளர்கள்ää பகுதி நேரப் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் போன்றோருக்கும் தொழிலற்றுப்போகும் சந்தர்ப்பங்களிலும் அதற்கான பலாபலன்களையோ அல்லது சுகாதார காப்புறுதி வசதிகளையோ பெற்றுக் கொள்வது கடினமாகக் காணப்படுகிறது. எனவே இச்சாரருக்கு ஏற்ற வகையில் பொருந்தக்கூடிய முறைமைகளும் தேவைப்படும்.

நோய்த்தொற்றைக் குறைக்க அரசாங்கங்கள் முயற்சிக்கையில் நமக்காக ஒவ்வொரு நாளும் தமது சொந்த ஆரோக்கியத்தை பணயம் வைக்கும் மில்லியன் கணக்கான சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர்களை (அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்) பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எமக்குத் தேவைப்படுகிறது. மருத்துவ மற்றும் ஏனைய அத்தியவசிய உபகரணங்களை வழங்கும் வண்டிகள் மற்றும் கடல்யாத்திரைகள் மூலம் சேவைகளை மேற்கொள்வோர்களை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். தொலைவேலை முறையானது வேலையில் புதிய வாய்ப்புகளை வழங்குவதோடு தொழில்வழங்குனர்களுக்கு நெருக்கடியான வேளைகளிலும் தங்களது வேலைகளை கொண்டு செல்ல உதவுகிறது. எவ்வாறாயினும் தொழிலாளர்கள் தங்களது இதர கடப்பாடுகளான குழந்தைகள் மற்றும் நோய்வாயப்பட்டவர்களை அல்லது சுகவீனமுற்றவர்களை கவனித்தல் அத்தோடு அவர்களது சொந்த நலன்கள் பற்றியும் கலந்தாலோசித்தல் வேண்டும்.

பல நாடுகள் ஏற்கனவே தங்களது சமூகங்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கான பல முன்னோடி நடிவடிக்கைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அவ்வகையான நடவடிக்கைகளின் செயற்றிறனை அதிகரிப்பதாயின் அரசாங்கங்கள் முதலாளிமார், தொழிற் சங்கங்களுடன் இணைந்து நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பது அவசியம் ஆகும். இது மக்களை மட்டுமல்லாமல் வேலைகளையும் பாதுகாக்கிறது. இவற்றில் வருமான வழிவகைகள், ஊதிய மானியங்கள், தற்கால பணி நீக்க மானியங்கள், சுய தொழிலாளர்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் வியாபார முயற்சிகளுக்கான நிதியுதவி போன்றவை அடங்கும்.

அதேபோன்று சரியான உள்நாட்டு முயற்சிகள் மற்றும் தீர்க்கமான பலதரப்பு நடவடிக்கைகள் போன்றவை உலக அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுக்க சிறந்த தீர்வாக அமையும். மார்ச் 26, COVID-19 பற்றிய G20 Virtual உச்சி மாநாடு இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் பலாபலனைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாகும்.

இந்தக் கடினமான நேரத்தில் ILO வின் யாப்பிலுள்ள பண்புகளை ஞாபகமூட்ட விரும்புகிறேன்: வறுமை செழிப்புக்கு எங்கும் அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது. வரப்போகும் ஆண்டுகளில் எங்கள் முயற்சிகளின் செயல்திறமையானது பண ஊசி மருந்துகளால் மட்டும் தீர்மானிக்கவோ அல்லது மீட்பு வளைவு செங்குத்தோ அல்லது தட்டையானது என்பதனாலோ அல்ல மாறாக நம் மத்தியில் வாழும் ஆபத்தான நிலையிலுள்ள மக்களுக்கு நாம் என்ன செய்தோம் என்பதனாலேயே என்பதை இது எமக்கு நினைவூட்டுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -