ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை 14.00 கிரீன்விச் இடைநிலை நேரம் (16:00 ஜெனீவா நேரப்படி) இற்குப் பிறகு
ஜெனீவா (ILO செய்தி) - COVID-19 நெருக்கடி நிலையானது 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டளவில் உலகளாவிய ரீதியில் சுமார் 6.7 வீதமான வேலைநேரங்களை அழித்துவிடும் என்று எதிர்வு கூறப்படுகிறது - இது 195 மில்லியன் முழு நேர பணியாளர்களுக்கு சமமானதாகும். அரபு நாடுகளிலேயே மிகவும் அதிகளவான குறைப்பு நடவடிக்கைகள் இடம்பெறலாம் என எதிர்வு கூறப்படுகிறது (8.1 விகிதம் அதாவது 5 மில்லியன் முழு நேரப் பணியாளர்களுக்கு சமமானது) ஐரோப்பா (7.8 விகிதம் அல்லது 12 மில்லியன் முழு நேரப் பணியாளர்கள்) மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் (7.2 விகிதம் ,125 மில்லியன் முழு நேரப் பணியாளர்கள்) இந்நிலை காணப்படுகிறது.
பல்வேறுபட்ட வருமானக் குழுக்களுக்கிடையில் அதிலும் குறிப்பாக மத்திய வருமானத்தைக் கொண்ட நாடுகளில் பாரியளவிலான இழப்புக்கள் எதிர்பார்க்கப்படுகிறது (7.0 விகிதம், 100 மில்லியன் முழு நேரப் பணியாளர்கள்). இது 2008-9 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளையும் விட மிகவும் பாரியளவில் உள்ளது.
தங்குமிட உணவு வசதி சேவைகள் , உற்பத்தித் துறை , சில்லறை வணிகம் மற்றும் வியாபார முகாமைத்துவ துறைகள் ஆகியன அதிக ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
2020 ஆம் ஆண்டின் உலகளாவிய வேலையில்லாப் பிரச்சினை அதிகரிப்பானது எதிர்கால அபிவிருத்தி மற்றும் கொள்கை முன்னெடுப்புகளிலேயே கணிசமான அளவு தங்கியிருக்கிறது. ILO இனால் கணிப்பிடப்பட்ட 25 மில்லியனை விட வருட இறுதி புள்ளிவிபரம் மிக அதிகரித்த நிலையில் காணப்படக்கூடிய மிக ஆபத்தான நிலையும் காணப்படுகிறது.
உலக தொழிற்படையான 3.3 மில்லியன் பேரில் ஐவரில் நான்கு பேரை விட அதிகளவானவர்கள் (81 விகிதம்) தற்போதுள்ள இந்த முழு அல்லது பகுதியளவான பணியிட மூடலினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
‘வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களிலுள்ள பணியாளர்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இரண்டும் பேரழிவை எதிர்கொள்கின்றன’ என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கய் றய்டர் குறிப்பிட்டுள்ளார். ‘நாம் மிக வேகமாகவும் , தீர்க்கமாகவும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். சரியான , அவசரமான நடவடிக்கைகள் உயிர்வாழ்விற்கும் , அழிவிற்கும் இடையிலான வித்தியாசத்தை ஏற்படுத்தும்’ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ILO கண்காணிப்பு 2ஆம் பதிப்பு: COVID-19 மற்றும் வேலையின் உலகு (இணைக்கப்பட்டுள்ளது) ஆனது COVID-19 என்பதை “இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான பாரிய உலக நெருக்கடி” எனக் குறிப்பிட்டுள்ளது. இது மார்ச் 18 ஆம் திகதி ILO இனால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் நோய்த்தொற்று நிலையினால் ஏற்பட்டுள்ள துறைசார் மற்றும் பிராந்திய தகவல்களும் இதில் உள்ளடங்குகின்றன.
புதிய ஆய்வின்படி பணி நீக்கம்> ஊதியம் மற்றும் வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றில் “கடுமையான மற்றும் பேரழிவு தரும்”அதிக ஆபத்தான துறைகளில் 1.25 பில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகமானோர் குறைந்த ஊதியம் குறை திறமை தொழில்களில் ஈடுபடுவதால் எதிர்பாராத வருமான இழப்பு மிகப்பாரதூரமானதாகக் காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள
பிராந்திய ரீதியில் எடுத்து நோக்குமிடத்து, இந்த “ஆபத்திலுள்ள” தொழிலாளர்களின் விகிதாசாரம் அமெரிக்காவில் 41 வீதத்திலிருந்து ஆசிய பசிபிக் நாடுகளில் 26 சதவீதம் வரை வேறுபட்டுக் காணப்படுகிறது. மற்றைய பிராந்தியங்களான குறிப்பாக ஆபிரிக்காவில் அதிகளவான முறைசாரா நிலையைக் கொண்டு காணப்படுகிறது, அவையாவன மிகக் குறைந்தளவிலான சமூகப் பாதுகாப்பு, அதிக சனத்தொகை அடர்த்தி மற்றும் பலவீனமான திறன் ஆகியவற்றறுடன் இணைந்து அரசாங்கங்களுக்கு கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார சவால்களையும் ஏற்படுத்துவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முறைசாரா துறைகளில் பணிபுரியும் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் (பெரும்பாலும் வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தியடையும் பொருளாதாரத் துறைகளில்) குறிப்பாக ஆபத்தான நிலைகளில் காணப்படுகின்றனர்.
பாரியளவிலான, ஒருங்கிணைந்த நான்கு மையங்களைக் கொண்ட கொள்கை நகர்வுகள் தேவைப்படுகின்றன: நிறுவனங்களுக்கான உதவிகள், வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் , பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துதல், பணியிடத்தில் தொழிலாளர்களைப் பாதுகாத்தல் மற்றும் அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிமார்ளுக்கிடையிலான சமூகக் கலந்துரையாடல்களை உருவாக்கி அவற்றின் மூலம் தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளல் என்பவற்றை இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“75 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான பாரிய சோதனை இது” என கய் றைடர் குறிப்பிட்டார். ஒரு நாடு தோல்வியுற்றாலும் நாமனைவரும் தோல்வியடைகிறோம். உலகிலுள்ள அனைத்து சமூகங்களின் பிரிவுகளுக்கும் குறிப்பாக எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையிலுள்ள அல்லது மிகக் குறைந்தளவு உதவிகளைப் பெறக்கூடியவர்களுக்கு அவர்களாக உதவிக் கொள்ளக்கூடிய தீர்வுகளை நாம் கண்டுபிடித்தாக வேண்டும். இன்று நாம் மேற்கொள்ளும் தெரிவுகள் இந்த நெருக்கடி வெளிப்படும் வழிகளை பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். “சரியான நடவடிக்கைகளின் மூலம் தாக்கத்தையும் அது விட்டுச் செல்லும் வடுக்களையும் எம்மால் குறைத்துக் கொள்ள முடியும். நாங்கள் மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பதன் மூலமே எங்களுடைய புதிய முறைமைகளை பாதுகாப்பனவையாகவும்ää சிறப்பானதாகவும், நிலைபேறானதாகவும் தக்கவைத்துக்; கொள்ள முடியும்.