இதுதொடர்பாக இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பினவருமாறு:
காலங்கடந்த வாகன தண்டத்தொகை ஆவண பணத்தை செலுத்துவதற்கான நிவாரண காலம்
கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் நடை முறைப்படுத்தப்படுவதினால் செலுத்தப்பட வேண்டியவற்றை செலுத்தமுடியாத வாகன தண்டத்தொகை ஆவண பணத்தை, மேலதிக தண்டப் பணமின்றி, செலுத்துவதற்கான நிவாரண காலத்தை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபரின் உடன்பாட்டின் அடிப்படையில் நிதியமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்தின் கீழ் தபால் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
02. இதற்கமைவாக 2020 மார்ச் மாதம் 1ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வழங்கப்பட்ட தண்டத்தொகை ஆவண பணத்தை, மேலதிக தண்டப் பணமின்றி எத்தகைய தபால் அல்லது உப தபால் நிலையங்களில் 2020.05.02 திகதி வரையில் (இந்த இரு தினங்கள் அடங்கலாக ) பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு சந்தர்ப்பம் உண்டு.
03. இதே போன்று 2020.02.16 ஆம் திகதி தொடக்கம் 2020.02.29ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டுள்ள தண்டத்தொகை ஆவண பணத்தை, அங்கீகரிக்கப்பட்ட மேலதிக தண்டப்பணத்துடன் செலுத்துவதற்கு 2020.05.02 திகதி வரையில் (இந்த 2 தினங்கள் உள்ளடங்கலாக) நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.
04. சம்பந்தப்பட்ட நிவாரண காலம் 2020.05.02 தினம் வரையில் மாத்திரம் ஏற்புடையது என்பதினால் இந்த காலப்பகுதிக்குள் குறிப்பிட்ட தண்டப் பணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.
05. மேலம், ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான நிவாரண காலம் இந்த மாவட்டத்தில் உள்ள தபால் / உபதபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும்.