T56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு-சந்தேக நபரும் கைதானார்

பாறுக் ஷிஹான்-

ரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைதானார்.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தனவின் கட்டளைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அயாஷ கருணாரத்தினவின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தரவின் நேரடிக் கண்காணிப்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கி சூடு இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள்(செவ்வாய்க்கிழமை(21) 26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் சந்தேக நபரை நாளை புதன்கிழமை(22) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -