UKயில் கொரோனாவுக்குரிய தடுப்பூசி நாளை முதல் மனிதர்கள் மீது சோதனையை தொடங்கும்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
க்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும் COVID-19 தடுப்பூசியின் மனித சோதனை நாளை முதல் தொடங்கும் என்று UK அரசாங்கம் அறிவித்தது.

கடந்த வாரம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிவேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், September மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினார்கள். அதன்படி தடுப்பூசி பணிகள் நிறைவடைந்துள்ளன.

UKயின் சுகாதாரச் செயலாளர் மாட் ஹான்காக் ( Matt Hancock ) நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சி குழுவுக்கு அவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்கு நிதியளிக்க UK அரசாங்கம் £20 Million ( சுமார் 470 கோடி ரூபா ) வழங்கும் மற்றும் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுக்கு மேலும் £22.5 Million ( சுமார் 525 கோடி ) வழங்கப்படும்
மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் சோதனை செயல்முறைகளை நிபுணத்துவ குழுவினர் துரிதப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, ஒக்ஸ்போர்ட் திட்டத்தின் கீழ் தடுப்பூசி நாளை முதல் மனிதர்கள் மீது சோதனை செய்யப்படும். கொரோனா வைரஸ் ஒரு சக்திவாய்ந்த எதிரி. ஆனால் அதை விட மனித அறிவின் சக்தி வலுவானது என்று நாம் நம்புகிறோம். நீண்ட காலத்திற்கு கொரோனா வைரஸைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழி இந்த தடுப்பூசியாகும் என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -