இந்த நேரத்தில் அரசுகள் தங்களால் முடியுமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவது குறித்து நாம் அறிவோம், ஆனால் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள அன்றாட பிரச்சினைகள் அதற்கான தேவைகள் /நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் அல்லது அடிப்படை முன்னெடுப்புக்களை உரிய ஊர் தலைவர்கள் இளைஞர்கள் தான் முன்னெடுக்க வேண்டும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதித்துள்ளது,
ஊருக்குள் பல தரப்பட்ட மக்கள் வாழும்போது ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள் இருக்கும்,
தனிப்பட்ட முறையில் செய்ய முடியுமான சில தேவைகள் இருக்கும் அதேநேரம் ஊர் என்ற அடிப்படையில் கூட்டுப்பொறுப்பக செய்யவேண்டிய சில அவசர தேவைகளும் இருக்கின்றது.
சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்:
1. ஒவ்வொரு ஊர்களிலும் கிருமிநாசினி தெளித்து சுத்திகரிப்பு செய்யும் பணி முன்னெடுக்கப்படல் வேண்டும், இதுவரை செய்யப்படாத ஊர்களுக்கு உடனே இதனை முன்னெடுக்க ஊர் தலைவர்கள் உரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டும் (disinfect and sterilize)
2. அண்மையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தொடர்பான தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு வழங்குதல்,
3. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் ஊரார் வெளியில் செல்லுவதை அல்லது சட்டத்தை மீறுவோர் தொடர்பாக அதிக அவதானத்தை / கட்டுப்படும் விதமான ஒத்துழைப்பை வழங்க தலைமைகள் படைகளுக்கு உதவ வேண்டும்.
4. எம் ஊர்களில் பணிகளில் உள்ள படைகள் / அதிகாரிகள் / வைத்தியத்துறை சார்ந்த்தோருக்கு முடியுமான ஒத்துழைப்புக்கள் / உதவிகளை வழங்க வேண்டும்
5. ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதால் தொழிலுக்குச் செல்லமுடியாது வீடடங்கியுள்ள குடுமபங்களுக்கு உதவுதல்,
6. அத்தியவசிய தேவைகள், உணவு மருந்துவகைகளில் ஏற்படும் தட்டுப்பாட்டை ஊர் தலைவர்கள் முன்வந்து நிவர்த்திசெய்ய வேண்டும்
7. பசியுடன் உறங்கும் ஊர் ஏழைகள், விதவைகளை அடையாளம் கண்டும் உரிய உதவிகளை உடன் வழங்க வேண்டும்
8. தனவந்தர்கள் / அரசு மூலம் கிடைக்கப்பெறும் உதவிப்பொருட்களை ஊரிலுள்ள தேவையுடையோருக்கு கொண்டுசெல்லும் பணியை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
9. போலிச் செய்திகளை பரப்புவோருக்கு உரிய தண்டனை வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
10. சாத்தியமான வழிகளினூடாக கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் (பள்ளி ஒலிபெருக்கி மூலம் இரவுநேரங்களில் சுருக்கமான அறிவித்தல்களை முன்னெடுத்தல்)
11. மன அழுத்தம், மனச்சோர்வு & பீதி பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்
12.
13.
இஸ்ஸதீன் றிழ்வான் (MBA, UK)
31/03/2020