ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோஸ்லி தோட்டத்தில் இன்று (02) திகதி ஆறு மணியளவில் தோட்டத்தொழிலாளர்களின் இலக்கம் 03 தொடர் குடியிருப்பு தீப்ற்றிக்கொண்டத்தில் 14 வீடுகள் சேதமடைந்தள்ளதாகவும், அதில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் அத்தோட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகர் தெரிவித்தார்.
குறித்த தீ விபத்தில் 12 ஆண்கள்,10 பெண்கள்,12 சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர ஆகியோர் வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான போர்வை,தலையணை உட்பட அத்தியவசிய பொருட்களையும் சமைத்த உணவipன பெற்றுக்கொடுக்க அம்பகமு பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
குறித்த தீ விபத்து இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது இந்த தீவிபத்தில் தொடர் குடியிருப்பிலிருந்த 14 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இதில் 11 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
குறித்த தீ விபத்து காரணமாக ஒரு சில தோட்டத்தொழிலாளர்களின் அத்தியவசிய ஆவனங்கள் உடு துனிகள்,வீட்டு உபகரணங்கள்,சமயலறை பாதிரங்கள்,உட்பட அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இந்த தீவிபத்து போதிலும் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீயினை பொதுமக்கள் ,இளைஞர்கள்,பொலிஸ் இரானுவம்,மற்றும் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தள்ளனர்.
குறித்த தீவிபத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும் தீ ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பாகவும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.