நள்ளிரவில் நகை பைசிக்கிள் போன் 10லட்சருபா கொள்ளை! காரைதீவில் சம்பவம்: மக்கள் அச்சத்தில்.:பொலிஸ் விசாரணை!




காரைதீவு நிருபர் சகா-
ள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை பைசிக்கிள் மற்றும் போன் உள்ளிட்ட சுமார் 10லட்சருபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றுநள்ளிரவு காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காரைதீவு 9ஆம் பிரிவில் வசிக்கும் மனோகரன் பிரபாகரன் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவில் இடம்பெற்ற இச்சம்பவத்தால் குடும்பத்தினர் ஆடிப்போயுள்ளனர். சம்மாந்துறைப்பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறைப்பொலிசார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச்சென்று மோப்பநாய் சகிதம் தேடுதல்களையும் விசாரணைகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் கொரோனாப்பீதிக்கு மத்தியில் காரைதீவு மக்கள் திருடர் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக திருட்டுச்சம்பவங்கள் பல இடம்பெற்று வந்துள்ளன. ஆனால் இச்சம்பவம் 1மில்லியன்ருபா பெறுமதியாகையால் கூடுதல் தொகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச்சம்பவம் தொடர்பாக வீட்டுரிமையாளர் திருமதி பிரபாகரன் ஊடகத்திற்கு கருத்துக் கூறுகையில்:

நேற்றிரவு 10அரை மணியளவில் நித்திரையானோம். நானும் பிள்ளைகளும் அவரும் மண்டபத்திற்குள் உறங்க தம்பி மறுஅறையில் உறங்கினார்.
நான் நினைக்கிறேன். முதலில் வீட்டுக்குள்வந்த திருடன் அவரது அறைக்குள் சென்று மேசை லாச்சியைத்திறந்து பார்த்திருக்கிறான். பின்பு அருகிலுள்ள ரவலிங் பேக்கைத்திறந்து பார்த்திருக்கிறான். அங்கிருந்த 2பவுண் மாலையைத்திருடியதோடு அவரது தலைமாட்டிலிருந்த போனையும் எடுத்திருக்கிறான். ரவலிங்பேக்கை வேலிக்குமேலால எறிந்திருக்கிறான்.

பின்பு மற்றஅறைக்குள் வந்து மேல கொழுவிஇருந்த தாலிக்கொடியை எடுத்திருக்கிறான். பின்பு எனது தலைமாட்டிலிருந்த போனையும் எடுத்துள்ளான்.
பின்பு வெளியேவந்து ஆட்டோவைத்திறந்து அதனுள் இருந்த ஆண்டுவைசன்ஸ் அதையெல்லாம் கீழேபோட்டுத்து அஙகிருந்த 300ருபாவையும் எடுத்திற்று அருகிலிருந்த மோட்டார்சைக்கிள் டிக்கியைத்திறந்து அங்கிருந்த சாமான்களையெலலாம் கீழெபோட்டுத்து அங்கிருந்த 1500ருபாவையும் எடுத்திருக்கிறான்.

பின்பு நேற்றுத்தான் மகனுக்காக 17ஆயிரம் ருபாவுக்கு வாங்கிவந்த புத்தாம் புது பைசிக்கிளையும் திருடியிருக்கிறான். அச்சைக்கிள் இன்னும் கழட்டிப்பூட்டல்ல. அந்தப் புதுச்சைக்கிளும் களவாடப்பட்டிருக்கின்றது.
இச்சம்பவங்கள் இடம்பெற்று முடிந்த நேரம்தான் எமக்கு 2அரை மணியளவில் விழிப்பு வந்தது. எழுந்துபார்த்தபோது கதவுகளெல்லாம் திறந்திருந்தன. பரபரப்புடன் அறைஅறையார்ப்பார்த்தோம். மேற்சொன்ன பொருட்கள் திருடப்பட்டதை உணர்ந்தோம்.
பின்பு பொலிசுக்கு முறைப்பாடு செய்தோம் என்றார்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -