கொரோனா (கொவிட் 19) தொற்று பரவுவதை தடுக்க கிண்ணியா பொது அமைப்புகள் கூட்டாக இணைந்து மக்களுக்கு வேண்டுகோள்


எம்.ஏ.முகமட்-
கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா,பிரதேச செயலகம்,நகர சபை,பிரதேச சபை,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,சுகாதார வைத்தியதிகாரிகள்,சூரா சபை மற்றும் பள்ளி வாசல் ஒன்றியம் ஆகியன இணைந்து பொது மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளது.
பொது அமைப்புகளால் முன் வைக்கப் பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது சிறுவர்கள்,பெண்கள் முற்று முழுதாக கடைத் தெருவுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்வதை முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு மீறி கடைகளுக்கு வருகின்றவர்களுக்கு கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தல்களை வழங்கி திருப்பி அனுப்பி வைக்கப் பட வேண்டும்.
எதிர் வரும் பெருநாள் தினத்திலோ அதற்கு பிந்திய தினங்களிலோ கடைத் தெரு,பூங்கா மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கூட வேண்டாம் .
பட்டாசு விற்பனை,பட்டாசு பாவனை என்பவற்றை முற்று முழுதாக தவிருங்கள்.
நாட்டின் நிலைமை இணையும் சுகாதார தேவைகளையும் கருத்திற் கொண்டு இந் நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலைகளில் சில வேளைகளில் சட்டம் ரீதியாக தடுக்கும் ஆற்றல் இல்லாதிருந்தாலும் ,எம்மை நாமே உணர்ந்து நடப்பது சிறந்த வழிமுறைகளை கைக் கொள்ள முடியும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப் ப்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -