கொவிட்19 கொரோனா அசாதாரண சூழ் நிலை காரணமாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த பொதியானது இன்று (03) கிண்ணியாவில் இயங்கி வரும் அல் ஹித்மதுல் உம்மா பவுண்டேசன் மற்றும் யுஎன்வி பவுட்டேசன் இணைந்து வழங்கி வைத்தன.
சுமார் 20 க்கும் மேற்பட்ட மூவின ஊடகவியலாளர்களும் உலர் உணவு பொதிகளை பெற்றனர்.
இதில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் பாதிஹ் ஹஸ்ஸாலி,முன்னால் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் உள்ளிட்ட ஊடக சங்க தலைவர் ஒலுமுதின் கியாஸ் ஷாபி போன்றோர்களும் கலந்து கொண்டார்.
இம்ரான் எம்.பி_
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டுவதை விட, கட்சித் தலைவர்களை அழைத்து சரியான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டால், அந்தத் தீர்மானங்கள் 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் முன்னிலைப்படுத்தப்படும் என்பதை, பிரதமர் விளங்கிக்கொள்ள வேண்டுமென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் இன்று (03)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில்
“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை, அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அவர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களை அழைத்து என்ன விடயங்களைப் பேச இருக்கின்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
“இந்தக் கூட்டத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, எங்களுடைய கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளமாட்டார். அதேபோன்று, ஜே.வி.பியினரும் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
“இப்பொழுது தேர்தல் சம்பந்தமாக பல விடயங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜூன் 20ஆம் திகதி தேர்தல் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தேர்தலுக்குப் பின்னர் வாக்குகள் எண்ணுகின்ற செயற்பாடுகள் யார் மூலமாக முன்னெடுக்கப்படும். அதுவும் இராணுவமயப்படுத்தப்பட்டு, இவர்கள் தான் வெற்றி பெற்றார்கள் என்று அரசாங்கம் அறிவிக்கக்கூடிய சூழல் இருக்குமென்ற அச்சம் மக்கள் மத்தியிலே காணப்படுகின்றது” என்றார்.