லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினதும் சஙகாரவேல் பவுண்டேசன் அமைப்பினதும் அனுசரணையில் பிரபல சமுகசேவையாளர் டாக்டர் இராமகிருஸ்ணன் சயனொளிபவன்(சயன்) அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 2000 உருணவுப்பொதிகளை வழங்கிவைத்தார்.
பற்றிநியூஸ் இணைத்தள ஸ்தாபகரான டாக்டர் சயன் விடுத்த வேண்டுகோளின்பேரில் மேற்படி இரு நிறுவனங்களும் நிதியுதவி செய்திருந்தன. மேலும் அவரது சொந்த நிதியையும் சேர்த்து இப்பொதிகளை தயார் செய்திருந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கொரோனாத்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்ற பொத்துவில்வட்டிவெளி மல்வத்தை பாலகடகுடா தாண்டியடி காரைதீவு வினாயகபுரம் குடிநிலம் சொறிக்கல்முனை நீலாவணை அட்டப்பள்ளம் சொறிக்கல்முனை தம்பிலுவில் 40ஆம் கட்டை தம்பட்டை அக்கரைப்பற்று ஆகிய கிராமங்களுக்குச்சென்று இப்பொதிகளை வழங்கிவைத்தார்.
ஊரடங்குவேளையிலும் தனது இளைஞர் தொண்டர் அணியினருடன் இப்பகுதிகளுக்குச் சென்று இவ்வுணவுப்பொதிகளை வழங்கிவைத்த டாக்டர் சயனுக்கு அந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.
எதிர்வரும் தினங்களிலும் இதுபோன்ற உதவிகளை மக்களுக்கு செய்யவிருப்பதாக டாக்டர் சயன் தெரிவித்தார்.