நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் ஸ்டொக்கம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு மதுபானம் தயாரிப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த 20000 மில்லிலீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்;த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த சந்தேகநபரை நேற்று (07) மாலை கைதுசெய்துள்ளதுடன் கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக கடந்த ஒன்றரை மாதகாலமாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்ததுடன் மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு அதிகவிலையில் விற்பனை செய்வதற்காக குறித்த சட்டவிரோத மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளன.
குறித்த சந்தேக நபர் மற்றும் கோடா போன்றவற்றை எதிர்வரும் 11ம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.