வளைகுடா உட்பட வெளிநாடுகளில் இலங்கையா்கள் 20 இலட்சம் பேர் தொழில் புரிகின்றனர்.

அஸ்ரப் ஏ சமத்-

லங்கை சனத்தொகையில் 20 இலட்சம் இலங்கையா் வெளிநாடுகளில் தொழிலாளா்களாக தொழில் செய்கின்றனா். இந்தியா் 200 இலட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில் செய்கினறனா். இலங்கையில் 70 வீதமானோா் மத்திய கிழக்கு அரபு நாடுகளிலேயே அதிகமாக தொழில் செயிகின்றனா்.

இவா்கள் இலங்ககைக்கு வருடாந்தம் அமேரிக்க டொலா் 7 பில்லியனை உழைத்து அனுப்புகின்றனா் .

இலங்கையின் அன்நியச் செலவானி வருமாத்தில இத் தொகை இலங்கையின் 19 வீதமாகும. கட்டாா் நாட்டில் 140.000 1 இலட்சத்து 40 ஆயிரம் குவைத் நாட்டில் 160,000 சவுதிஅரேபியாவில் 1,20,000 துபாய் 1,25,000 கொரியா 95,000.00 ஆகிய நாடுகளிலேயே இலங்கையா் கூடுதலாக தொழில் செய்கின்றனா். இவா்களில் குவைத்தில் மட்டும் கடந்த 3 மாத காலமாக கோரோனா பிரச்சினை ஏற்பட்டதும் 19 ஆயிரம் பேர் விசா இன்றி, கடவுச் சீட்டு இன்றி தமது தொழில் ஒப்பநதம் முடிவடைந்து நாடடுக்கு வர காத்திருப்பவா்கள். 

அல்லது கொரோனாவில் கம்பனிகள் மூடப்பட்டு தொழில் ்இழந்தவா்கள். சில பணிப்பெண்கள் தொழிலாளா் வெளியில் பாய்ந்து தொழில் செய்தோா்கள் என 19ஆயிரம் பேர் இலங்கைக்கு வர காத்து நிற்கின்ரனா். இதே போன்றுதான் கட்டாா் நாட்டிலும் 12 ஆயிரம் பேர் இலங்கை வர காத்து நிற்கின்றனா். இவா்களை இலங்கை அரசு உரிய துாதுவா்கள் ஆலயங்கள் ஊடாக இலங்கைக்கு கொண்டுவருவதற்காக நடவடிக்கை எடுக்கின்றது. 

இவா்களை இலங்கை அழைத்து வருவதற்கு இலவசமாகவே பிரயாணச் சீட்டு வழங்கி 14 நாட்கள் இலங்கையில் தடுத்து வைத்தலும் வேண்டும். இவா்கள் நாளாந்தம் நாட்டிற்குள் வரும் போதுஎதிா்காலத்தில இலங்கை தொழில் இல்லாப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.. மத்தியகிழக்கு நாடுகளில் உள்ள கம்பணிகள் லொக் டவுன் கொரோனா பிரச்சினையில் வருமானங்களை இழந்துள்ளது அத்துடன் வெளிநாட்டவா்கள் கோரோனா நோய்னால் இறந்துள்ளனா். 

அத்துடன் அவா்களை சிகிச்சை செய்வதற்கும் உரிய வசதிகள் அங்கு இல்லை.தற்பொழுது அங்குஉள்ள ஊழியா்களுக்கு . சில அராபிய கம்பணிகள் அரை மாத சம்பளத்தையே சிலருக்கு தமது ஒப்பந்தம் முடியும் வரை வழங்குகின்ற இதனால் சகல இலங்கையா்களும் தமது நாட்டுக்கே நா்ம் சென்றுவிடுவோம் என உறுதிப்பட்டில் உள்ளனா். 

அதில் குறைந்தது 10 இலட்சம் பேர் வரையாவது அடுத்த ஒரு வருடத்திற்குள் சொந்த நாட்டுக்கு வந்துவிடுவாா்கள் . இதனை இலங்கை எவ்வாறு சமாளிக்கப் போகின்றது. இலங்கையில் தொழில் இல்லாப்பிரச்சினை ஒன்று ஏற்படும். இலங்கையின் பொருளாதாரத்தில் பாரியதொரு நெறுக்கடியைச் சந்திக்க உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -