கொழும்பு மாவட்டத்தில் உள்ள 23 பொலிஸ் நிலையங்களுக்கு பாதுகாப்பு அங்கிகளும், முகக் கவசங்களும் வழங்கிவைப்பு


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
க்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கிளையான ஐக்கிய நாடுகள் சங்கம் கொரோனா நோய் பரவும் இத்தருணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 23 பொலிஸ் நிலையங்களுக்கு பாதுகாப்பு அங்கிகளும், முகக் கவசங்களும் வழங்கியுள்ளன.
பாணந்துறை, கல்கிஸ்சை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள 23 பொலிஸ் நிலையங்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. கொரோனா நோய் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கள், அவர்களின் சுகாதாரம் உள்ளிட்ட நலன் கருதியே இவை வழங்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம்.றுஸானுடீன் தெரிவித்தார்.
இன்று வாழைத்தோட்ட பிரதான பொலிஸ் பரிசோதகரும், பொலிஸ் பொறுப்பதிகாரியுமான டபிள்யு.டி.பி. சேனாரத்னவிடம் வாழைத்தோட்ட பொலிஸாருக்கான 20 பாதுகாப்பு அங்கிகளையும், 30 முகக் கவசங்களையும் சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம்.றுஸானுடீன் மற்றும் சங்கத்தின் செயலாளர் எரேல் சுமித் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர்.
இச்சங்கம் பாணந்துறை வைத்தியசாலைக்கு அத்திவாசியமாக தேவையான சலவை இயந்திரம், பாதுகாப்பு அங்கிகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -