கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் முதியோர் சங்கங்களுக்கு 300000.00 ரூபா பெறுமதியான தளபாட உபகரணங்கள் வழங்கிவைப்பு.

ஏ.எல்.எம்.ஷினாஸ்-

மூக சேவைள் அமைச்சின் தேசிய முதியோர் செயலகத்தினால் 'கிராம மட்டங்களில் உள்ள ஆயிரம் முதியோர் அமைப்புக்களை வலுவூட்டுதல்' எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட முதியோர் சங்கங்களுக்கு தளபாட உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு (22) பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை சிரேஸ்ட பிரஜைகள் குழு, சேனைக்குடியிருப்பு மற்றும் கல்முனை ஆகிய முதியோர் சங்கங்களுக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தளபாட உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதன்போது கொரோணா தொற்று நோயில் இருந்து முதியோர்கள் பாதுகாப்பு பெற வேண்டியதன் அவசியம் பற்றியும் முதியோர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து பராமரிப்பு மத்திய நிலையத்தை அமைத்து அதன் ஊடாக முதியோரின் நலனோம்பு விடயங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பிரதேச செயலாளர் இங்கு முதியோர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் நிருவாக சேவை அதிகாரி எம்.ஜீவராஜ், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எல்.சபாஸ்கரன், சமூகசேவைகள் உத்தியோகத்தர்களான கே.சிவகுமார், எம்.ஐ.எம்.முர்சித், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -