கல்முனையில் 35 அடி தட்டு பொட்டிப்பட்டத்தை அமைத்த இளைஞர்கள்


பாறுக் ஷிஹான்-
ல்முனை பிராந்தியத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மாலை நேர பொழுது போக்கு செயற்பாடாக வண்ண வண்ணப் பட்டங்களை வடிவமைத்து வான்வெளியில் பறக்க விட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை கல்முனையை சேர்ந்த இளைஞர்கள் 6 பேரின் முயற்சியினால் 20 தட்டு பல வர்ணங்களை கொண்ட பொட்டிப்பட்டத்தை வடிவமைத்து அதனை வானுயர பறக்கவிட ஆயத்தமாகி வருகின்றனர்.

மேற்படி பிராந்தியத்தில் இம் முயற்சியினை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சில தினங்களுக்கு முன்னர் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து வான் வெளியில் பொதுமக்களின் பார்வைக்காக இவ்வாறான பட்டங்களை பறக்கவிட்டு வளாகத்தில் சூழ்ந்திருந்த அனைவரையும் மகிழ்வித்து வருகின்றனர்.

பட்டமிடும் செயற்பாடானது தூரக்காட்சிகளை பார்ப்பதில் உள்ள சிரமங்களை களைந்து ஒரு சிறந்த பயிற்சியாகவும் திகழ்கின்றது. முதலாம் உலகப்போரின் போது படைவீரர்கள் எதிரிகளை அடையாளம் கண்டுகொள்ளவும் சகவீரர்களுக்குச் சமிக்ஞைகள் கொடுக்கவும் பட்டங்களைப் பயன்படுத்தியதாக வரலாறுகள் சொல்கின்றன.

மேலும் இதுபோன்ற எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பல வண்ண பட்டம் விடும் செயற்பாட்டினை பொழுது போக்காக விளையாட்டாக கலையாக படிப்பாகப் பார்க்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -