உலகின் வல்லரசுகள் முதல் இலங்கை வரை ஸ்தம்பித்து வைத்திருக்கும் கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் வேகம் காரணமாக பிரகடனம் செய்யப்பட்ட ஊரடங்கு கட்டளை, மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் பசியை போக்கும் உலர் உணவு பொதி விநியோகத்தை வெற்றிகரமாக அம்பாறை மாவட்டத்தில் நீங்கள் செய்து கொண்டிருப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகிறோம். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் பிரதி தலைவர் அப்ரிடீன் எம் ஷரிபுதீன் அனுப்பியுள்ள நன்றி நவிலல் கடித்ததில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும்,
தனிமனிதனாக நின்று 5.5 மில்லியனுக்கும் அதிகமான ரூபாய்க்களை செலவு செய்து இந் நிவாரண திட்டத்தை செயற்படுத்தி பொத்துவில், இறக்காமம், வரிப்பத்தான்சேனை, குடுவில், வாங்காமம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, நாவிதன்வெளி, மத்தியமுகாம், நற்பட்டிமுனை, மருதமுனை, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, உட்பட பல பிரதேசங்ககளையும் சேர்ந்த மக்களுக்கு உங்களுடைய உதவிகள் சென்றடைந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இதே போன்று இன்னும் சில பிரதேசங்களுக்கும் உங்களுடைய உதவிகள் சென்றடைய ஆயத்தங்களை செய்து அவற்றை அம்மக்களுக்கும் வழங்கி வைக்க முயற்சிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இக்கட்டான இச் சுழ்நிலையில் உங்களுடைய உதவிகள் அம்மக்கள் மத்தியில் இருந்த பெரும் சுமைகளை தளர்த்தியிருக்கும் என நம்புகிறோம். இப்பணியை செய்து முடிக்க நிதிவழங்கி இப்பணியை முன்னெடுத்த உங்களுக்கும், இப்பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க உங்களுடன் உறுதுணையாக இருந்த அத்தனை உறவுகளுக்கும் இறைவன் தேக ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்க பிராத்திப்பதுடன் உங்களின் வாழ்வில் பரக்கத் உண்டாகவும் பிராத்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.