அம்பன் புயலால் 5,550 வீடுகள் சேதம்! 2 பேர் உயிரிழப்பு!

சுரேஸ் சக்தி-
ங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து அம்பன் புயலாக உருவானது. கொரோனா பாதிப்பு நெருக்கடிக்குள் இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த புயல் பெரும் சவாலாக அமைந்தது. இருப்பினும் புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தில் இன்று மேலும் 5 லட்சம் மக்களையும், ஒடிஷாவில் 1,58,640 மக்களையும் வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.

இதற்கிடையில் இன்று மாலை மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக அம்பன் புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் மேற்குவங்கம் வடக்கு - 24 பர்கனாஸ் பகுதியில் 5,550 வீடுகள் சேதம் அடைந்ததுடன், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -