காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 பேரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்-படங்கள்




பழுலுல்லாஹ் பர்ஹான்-

கொ
விட்-19 கொரோனா வைரஸ் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்றுவந்த 62 நோயாளிகளில் ஆண்கள்,பெண்கள்,முதியவர்கள்,சிறுவர்கள் உட்பட 55 பேர் உடல் நலம் முழுமையாக குணமடைந்த நிலையில் இராணுவத்தின் உதவியுடன் இரண்டு பஸ் வண்டிகள் மூலம் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் நோயிலிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்த 55 பேரையும் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று 10 ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி தள வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் கொரோனா வைரஸினால் குணமடைந்தவர்களுக்கு பழங்கள்,நீர் உள்ளிட்ட உணவு ஆகாரங்களும்,சிறுவர்களுக்கான கதிரைகள் உட்பட அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.


இங்கு வைத்தியசாலையின் முன்றலில் இலங்கை திருநாட்டின் தேசியக் கொடிகளை அசைத்து அவர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டதோடு அவர்களுக்கும் தேசியக் கொடிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் உட்பட வைத்தியர்கள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,இராணுவ உயரதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸினால் குணமடைந்து சென்ற சிலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தங்களை சிறந்த முறையில் பராமரித்து தங்களுக்கு சிறந்த முறையில் உணவுகளை வழங்கிய காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர்கள்,ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினருக்கும்,அரசாங்கத்திற்கும்,இராணுவத்திற்கும்,பொலிசார் உள்ளிட்ட காத்தான்குடி மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸினால் சிகிச்சை பெற்று குணமடைந்து இராணுவத்தின் உதவியுடன் இரண்டு பஸ் வண்டிகள் மூலம் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டவர்கள் கொழும்பு,கம்பஹா,களுத்துறை,காலி மாவட்டங்களைச் சேர்ந்த பேருவளை,ஜாஎல,கொழும்பு பண்டார நாயக்கா மாவத்தை,காலி போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -