6 நாட்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா- பொருளாதார நெருக்கடிக்குள்ளான ரஸ்யா!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார்.

தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

குறிப்பாக, கடந்த ஆறு நாட்களில் அந்நாட்டில் புதிதாக 60,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக அங்கு 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,87,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 1,723 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -