இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு இதுவரை -823

ன்று (07) இரவு 11.55 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 805 இலிருந்து 823 ஆக அதிகரித்துள்ளது.


அதற்கமைய இன்றையதினம் (07) கொரோனா வைரஸ் தொற்றிய 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 17 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (07) அடையாளம் காணப்பட்டவர்களில் 06 பேர் கடற்படையினர் என அறிவிக்கப்பட்டிருந்ததோடு, வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படையைச் சேர்ந்த தம்பதியினரின் 13 மாத குழந்தை ஒன்றுக்கும் கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தபட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

குறித்த தம்பதியினரின் மூத்த குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று கண்டறியப்பட்டதாக, அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் (05) அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு மரணித்த இலங்கையின் 9ஆவது மரணமாக பதிவான பெண் உள்ளிட்ட 13 பேரின் PCR சோதனைகளில் தவறு ஏற்பட்டுள்ளதாக, இலங்கை அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் (The Sri Lanka Association of Government Medical Laboratory Technologists (SLAGMLT) இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 823 பேரில் தற்போது 582 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 232 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 134 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.



அடையாளம் - 823
குணமடைவு - 232
இன்று அடையாளம் - 26
இன்று குணமடைவு - 17
சிகிச்சையில் - 582
மரணம் - 09
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -