கஞ்சாவுடன் கைதான பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா ரூபா 9900 தண்டப்பணம்

பாறுக் ஷிஹான்-

டந்த புதன்கிழமை(20 ) முற்பகல் 10 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி கல்முனை 2 இல் உள்ள வீடொன்றில் குடும்பம் ஒன்று சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய உப பொலிஸ் பரிசோதகர் அனுசன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் சந்தேக நபரான பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வர் செய்யப்பட்டதுடன் வியாழக்கிழமை(21) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா 9900 வீதம் மொத்தமாக ரூபா 39 ஆயிரத்து அறுநூறு தண்டப்பணம் செலுத்த கல்முனை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வரிடமும் இருந்து 1200 700 1400 650 மில்லி கிராம் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதாகி விடுதலையானவர்கள் 50, 30, 25 ,49, வயதினை உடையவர்கள் எனவும் இவ்வாறு கைதானவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளடங்குகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -