இலங்கையில் கொரோனா நோய் காரணமான 9ஆவது மரணம்..!

கொழும்பு 15, மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

IDH வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்றையதினம் (04), இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்த முதலாவது பெண் மரணம் பதிவான நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள 9ஆவது மரணம், இரண்டாவது பெண் மரணமாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்

1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.

3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்

7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.

இதேவேளை, மேலும் 03 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (05) பிற்பகல் 1.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 194 இலிருந்து 197 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (05) இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிய 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 03 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, நேற்று அடையாளம் காணப்பட்ட 33 பேரில் 31 பேர் கடற்படையினர் எனவும் ஏனைய இருவரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனவும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.



அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 755 பேரில் தற்போது 549 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 145 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 755
குணமடைவு - 197
இன்று அடையாளம் - 04
இன்று குணமடைவு - 00
மரணம் - 01
சிகிச்சையில் - 549
மரணம் - 09
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -