திருக்குர்ஆன்' புவிக்கு வந்த மாதமே! சுஐப் எம். காசிம்-


மாதங்கள் பன்னி ரண்டில் மகிமை பெறும் றமழான்
ஆதி இறைவன் அளித்த அரிய பெரும் பாக்கியமாம்
வேதமாம் வாழ்வின் ஒளி விளக்காய் நின் றொளிரும்
போதம் திருக்குர்ஆன் புவிக்கு வந்த நன் மாதம்.


புனித மறை போதிக்கும் புகழ் பூத்த அறநெறியை
இனிய நபி சுன்னாவை இயன்றவரை பேணி நின்று
இதமாக நோன் பிருந்து தொழுது சக்காத் அளிக்கும்
திருநிறைந்த நல வாழ்வைச் செப்பு கின்ற நல்றமழான்

அல்குர் ஆன் அல்லாவின் அருங் கொடையென் றேநினைந்து
அனுதினமும் ஓதி அதன் கருத் துணர்ந்து நேர்வழியில்
நல்ல வோர் அடியவனாய் நாயனது நேசத் தை
எல்லை இல்லா இன்பத்தை ஈட்டித் தரும் றமழான்

கோபம், குரோதம் கொடுஞ் சூது வாதொழித்து
பேதங் கள் நீக்கிப் பிற மாந்தர் தம்முடனே
பாச முடன் பழகிப் பண்புக் கிலக்கண மாய்
நேசமுடன் வாழ் வதற்கு நெறிப் படுத்தும் நல்றமழான்

ஆருயிரும் அழகு டலும் அனுதினமும் நல்லு ணவும்
சீர்பெருகு பிள்ளை மனை செல்வமுடன் கல்வி தரும்
மாதலைவன் அல்லா வின் மகிமை உணர வைத்து
நேசன் உடன் நம்மை நெருங்க வைக்கும் நல் றமழான்

உள்ளநிதி போதா தென் றுழைத்துச் சேர்த்து வைக்கும்
கல்மனத்து மாந்தர்களும் கனிந்து பெருங் கருணையுடன்
இல்லாத ஏழைகளை அநாதைகளை ஆதரிக்கும்
நல்லமனம் கொள்ள வைக்கும் நல மிகுந்த நல்றமழான்

“றமழானில் செய்கின்ற நல் அமல்கள் அத்தனைக்கும்
நானே பரி சளிப்பேன்” என்ற இறை வாக்கதனை
மனதாரவே உணர்ந்து மாத வத்தில் ஈடுபட
மாந்தர்க் கறிவுறுத்தும் மாதமே நல் றமழான்

“தொழுகை தான் சொர்க்கத் திறவு கோல்” என்கின்ற
பழு தில்லா எண்ணம் பதிந்த மனத் தினர்க்கு
பர்ளுகள் சுன்னத்தை தஹஜ் ஜுத் தராவீஹை
நிறைவு செய்யும் நல் அமலை நினைவூட்டும் நல்றமழான்

வட்டி தவிர்ப்ப தற்கும் வட்டிக்கு வட்டி பெறும்
கெட்ட செயல் மறந்து கீழ்த்தர மாம் எண்ணங்கள்
விட்ட கற்றி அல்லாவின் ஆணைக் கடி பணிந்து
இட்ட முடன் வாழ்வதற்கு ஏவு கின்ற நல் றமழான்

நல்லறங்கள் செய்வ தையும் பொல்லாச் செயல் களையும்
நாயன் அறி கின்றான் என்றபே ருண்மை தனை
உள்ளம் உணர்ந் திடவும் ஒழுக்க நெறி பேணிடவும்
நல்லதொரு வாய்ப் பளிக்கும் நன் மாதமே றமழான்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -