நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை - பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை


பாறுக் ஷிஹான்-
ம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தெரிவித்தார்.

தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பகுதியில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ள நிலைமையை வெள்ளிக்கிழமை(22) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கடல் கொந்தளிப்பு குறைந்து கடல் நீர் முன்னோக்கி வருவது குறைவாக வரும் பட்சத்தில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடலரிப்புக் கரணமாக கரையோரப் பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதோடு அதிகளவான தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் பொருளாதார ரீதியாகவும் கடுமையாகப் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -