பள்ளிவாசல்களின் அருகே கூட்டமாக இருப்பது பொழுதுபோக்கிற்காக பட்டம் விடுவது ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை



பாறுக் ஷிஹான்-
ள்ளிவாசல்களின் அருகே விஷேடமாக வெள்ளிக்கிழமைகளில் கூட்டமாக இருப்பது சில வியாபார ஸ்தாபனங்களில் மக்கள் முட்டி மோதுவது சிலர் பொழுதுபோக்கிற்காக பட்டம் விடுவது போன்ற செயற்பாடுகளில் ஒன்று கூடுவது அவ்வளவு ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

நாளை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்து வதற்கான அறிவிப்புகள் வந்த நிலையில் எமது கல்முனைப் பிராந்தியத்தை பொருத்தளவில் இதுவரை காலமும் நாங்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஒருமைப்பாட்டுடன் பல விடயங்களை பல நபர்களை ஒன்றிணைத்து இன்றுவரை பாதுகாப்பாக இருக்கின்றோம்.

 இருந்தாலும் நாளைய தினம் சுமுக நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு அரசாங்கத்தினால் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மக்கள் சாதகமான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கட்டுப்பாடு அல்லது சுகாதார அறிவுறுத்தல்களை உடைத்து விடக் கூடாது.

 இதனை உடைத்து விடுவோம் ஆனால் இன்றுவரை அனைவரும் எமது வீரர்களை சிந்தி உழைத்தது வீணாகிப் போய்விடும் ஆகவே மக்கள் கொவிட் 19 தொற்று பரம்பலை உறுதியாக விளங்கிக் கொண்டவர்களாக தமது கட்டுப்பாடுகளை எந்தவித தளர்வும் இல்லாமல் இதனை மேற்கொண்டு செல்ல வேண்டும்.

உண்மையில் சில விடயங்கள் நமக்கு சவாலாக காணப்படுகின்றது. 

ஏனென்றால் இரண்டு மாத காலமாக மக்களை வீட்டுக்குள் அடங்கி இருப்பது என்பது சாத்தியம் குறைந்த ஒரு விடயம் ஆனாலும் இந்தக் கொடிய நிலையை அடைந்து கொண்டவர்களாக மக்கள் நடந்து கொள்ள வேண்டும் சில சமயங்களில் நான் கண்டிருக்கின்றேன் சிலர் வீதிகளில் உலா வருகின்றனர்.

 பள்ளிவாசல்களின் அருகே விஷேடமாக வெள்ளிக்கிழமைகளில் கூட்டமாக இருப்பது சில வியாபார ஸ்தாபனங்களில் மக்கள் முட்டி மோதுவது சிலர் பொழுதுபோக்கிற்காக பட்டம் விடுவது போன்ற செயற்பாடுகளில் ஒன்று கூடுவது அவ்வளவு ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை பெற்றோர்களும் பிள்ளைகளும் இதனை புரிந்து கொண்டு எங்களுடன் இணைந்து போராடினால் தான் பாரதூரமான விட்டு விலகி தொற்று அற்ற பிராந்தியமாக அடையாளப்படுத்த முடியும் என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -