அரசுடன் தேசிய காங்கிரஸ் உறவு வைத்தாலும் ஜனாஸா எரிப்பு விவகாரத்தி்ல் எமது எதிர்ப்புப் பாேராட்டம் தாெடரும் : வேட்பாளர் மர்சூம் மௌலானா விளக்கம்.


நூருள் ஹுதா உமர்-
திருமண பந்தம் ஆரம்பமாகும் பாேதே விவாகரத்துக்கான பரஸ்பர உரிமையும் உருவாகி விடுகிறது அதற்காக திருமண பந்தமே தவறானது அல்ல. ஜனாஸா எரிப்பு தாெடர்பில் விமர்சனத்தை தேசியப்பட்டியல் கனவை துச்சமாக மதித்து துணிவாக தனது கருத்தை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி பாராட்டப்பட வேண்டியவரே என தேசிய காங்கிரசின் பொதுத்தேர்தல் வேட்பாளரும், அறிஞர் சித்தி லெப்பை ஆய்வு பேரவை தலைவருமான சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார்.
மேலும் அரசுடன் தேசிய காங்கிரஸ் உறவு வைத்தாலும் ஜனாஸா எரிப்பு விவகாரத்தி்ல் எமது எதிர்ப்புப் பாேராட்டம் தாெடரும். ஆனால் அனைவரும் அதை வைத்து அரசியல் செய்யாமல் ஈமானுடன் செயற்படுங்கள் என்றுதான் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் அவர்கள் கூறியிருந்தார்.
ஆனால் பாெதுவெளியில் இந்த இரண்டு ஆளுமைகள் மாத்திரமே திட்டமிடப்பட்டு குறி வைக்கப்படுகின்றனர். இன்னும் ஆயிரம் பிரச்சினைகள் தாேற்றம் பெறலாம்.

பாெத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியிருக்கும் சில பகுதிகள் புனித பிரதேசமாக அடையாளம் கண்டிருப்பதாக
அறிகிறாேம். இனவாதிகள் இதனை சூடேற்றி குளிர்காய முனைகிறார்கள்.ஆனால் நாம் மாற்றுவழி தாெடர்பில் சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தேசிய காணிக் காெள்கையினை பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்ற வேண்டும். இன்னும் பல வில்பத்து விவகாரங்கள் தாேற்றம் பெறக்கூடாது என்பதற்காக இதனை நான் பல வருட காலமாக கூறி வருகிறேன்.

தேசிய காங்கிரஸ் பாலமுனை பிரகடனத்தில் மாவட்டம் தாேறும் இனவிகிதாசார ரீதியாக காணி நிலம் பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது தீர்வல்ல.நிந்தரமான தீ்ர்வினை அடைவதற்காக உழைப்பதே தார்மீகம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -