இன்று நெதர்லாந்திலிருந்து மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கியவர்கள்


ஜே.எப்.காமிலா பேகம்-
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நெதர்லாந்து கப்பலில் பயணித்த, சுமார் 53 பேர் கொண்ட பணிக்குழாம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இவ்வாறு , இன்று Boing767-300ER விசேட விமானம் மூலம், சுமார் 230 பேர், மனித நேய பணிக்காக மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.இவர்கள் இங்கிருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை இரவில் நாடு திரும்புகின்றனர்.
மனிதாபிமான சேவைக்காக வந்திருந்த இவர்கள் 53 பேரும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று தற்போதைய நெருக்கடியான நிலையில், மத்தள விமான நிலையத்திற்கு வந்து இன்று இரவு வரை தங்கியிருக்கவுள்ளனர்.

விமான நிலையத்தில் அவர்கள் கிருமி தொற்று நீக்கும் திரவம் தெளிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டனர்.இதே வேளை இன்று வருகை தந்த பணி ஊழியர்கள் 230 பேரும், தற்போது காலிதுறைமுகம் நோக்கி விசேட பஸ் வண்டிகளில் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -