சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி தோணா பாலத்தடியில் கழிவுகளை வீசியவரை தேடிப்பிடித்து கழிவுகளை அகற்றிய சம்பவம்! களத்தில் மாநகரசபை உறுப்பினர் ஜௌபர்.


ல ஆண்டுகாலமாக சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தோணா பாலத்துக்கு அருகாமையில் பிரதேசவாசிகளால் கொட்டப்பட்டு வந்த வீட்டுக் கழிவுகளின் காரணமாக குறித்த பிரதேசம் மிகுந்த சீரழிந்த நிலையில் காணப்பட்டது.
குறித்த பிரதேச வாசிகளும் பல்வேறு ஊடகங்களும் பிரதேசத்தில் காணப்பட்ட சுகாதார சீர்கேட்டை சுட்டிக்காட்டியதன் காரணமாகவும் வட்டாரத்துக்குரிய மாநகரசபை உறுப்பினர் தொழிலதிபர் எம்.வை.எம். ஜௌபர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயச்சியின் காரணமாகவும் கல்முனை மாநகரசபை முதல்வர் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடனும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடனும் சுத்தப்படுத்தப்பட்டு மின்சார வசதி மற்றும் இருக்கைகள் என்பன இடப்பட்டு அழகு படுத்தப்பட்ட அதேவேளை குறித்த பிரதேசத்திலிருந்து ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்கள் தவிர்ந்த அனைத்துத் தினங்களிலும் காலை 6.30முதல் 7.30 வரை கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
குறித்த பிரதேசத்துக்கு வருகை தந்த மாநகரசபை உறுப்பினர் ஜௌபர் அவர்கள் இன்றைய விடுமுறை தினத்தில் வீசப்பட்டிருந்த கழிவுகளை வீசியவரை கண்டுபிடித்து அவராலேயே அவைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இங்கு கருத்துத் தெரிவித்த மாநகரசபை உறுப்பினர், பொலிசாரின் அறிவித்தல் போடப்பட்டுள்ள போதிலும் சிலரது போக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கின்றது என்றும் இனிமேல் கழிவுகளை சேகரிக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கழிவுகளை வீசுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -