நாளை அலுவலகங்களுக்குச் செல்லத்தயாராக இருப்போருக்கு...


அம்பாறை மருத்துவ அலுவர் வைத்தியகலாநிதி லவப்பிரதன் கூறும் அறிவுரைகள்!
காரைதீவு சகா.-
நாளை 11ம் திகதி திங்கட்கிழமை முதல் பெரும்பாலானவர்கள் தொழிலுக்குச் செல்லவிருக்கின்றீர்கள். அவர்களுக்காக அமபாறை ப்பிராந்திய மலேரியாத்தடுப்பு இயக்கத்தின் மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் சதாசிவம் லவப்பிரதன் சில அறிவுரை வழிகாட்டல்களைக்கூறுகிறார்.
அவர் அது பற்றித் தெரிவிப்பதாவது,

முதலில் உங்களுக்கு காய்ச்சல் ,தொண்டை வலி போன்ற நோய் அறிகுறிகள் இருந்தாலோ, கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தாலோ, அலுவலகம் பக்கம் செல்வதைத் தவிருங்கள்.
உள் நுழையும் போது உங்கள் கைகளைச் சவற்காரமிட்டு சரியான முறையில் கழுவிக்கொள்ளுங்கள் அல்லது hand sanitizer கூட பாவிக்கலாம்.உள்நுழையும் போதே உங்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவது மேலும் நன்மையாகும். ஆனால் கடடாயம் இல்லை.
கொரோனா வைரஸ் சப்பாத்தின் அடிப்பகுதி மூலமும் பரவக்கூடியது. ஆகவே 0.1% அளவு குளோரின் கொண்ட தொற்று நீக்கி அடங்கிய பாத்திரத்தில் உங்கள் சப்பாத்துக்களின் அடிப்பாகத்தை நனைத்துக்கொண்டு உள்செல்வது நல்லது( 10 litre நீரில் 30g TCL எனப்படும் குளோரின் தூளினை கலந்து 0.1% குளோரின் கரைசலை தயாரித்துக்கொள்ளலாம் அல்லது CLOROX போன்றவற்றை கூடப் பயன்படுத்திக்கொள்ளலாம்).

விரல் அடையாளம் இடும் இயந்திரம் உள்ளதா? அதனைப் பாவிப்பதற்கு முன்னும் பின்னும் கைகளை hand sanitizer மூலம் சுத்திகரித்து கொள்வது கட்டாயமானதாகும் .
தொடர்ச்சியாக முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயமானதாகும்.
இதுவரை அலுவலகத்தில் இருந்த பழக்கங்களான வாடிக்கையாளரிடம் கை குலுக்குதல்,நண்பர்களை தழுவி வரவேற்றல் , சக ஊழியரின் காதருகில் சென்று குசுகுசுத்தல், ஒரு உணவுப்பொதியை ஒன்பது பேர் சேர்ந்து சாப்பிடுதல் போன்ற சமூக இடைவெளியைக் குறைக்கும் விடயங்களை இனிமேல் தவிர்த்து விடுங்கள்.
அடுத்தவரிடம் பேனா கடன் வாங்கி பாவித்தல், அடுத்தவரின் கணினிகளை அல்லது கைத்தொலைபேசிகளை நோண்டுதல், சக ஊழியர் இல்லாத போது அவரின் கதிரை மேசைகளைப் பாவித்தல் போன்றவையும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். இவ்வளவு ஏன், அடுத்தவர்களிடம் தேவையில்லாமல் கதைப்பதைக் கூட நிறுத்தி விடுங்கள். மூன்று அடி சமூக இடைவெளி கட்டாயமானது.

அலுவலக பிரிவுகளுக்கிடையேயான கதவுகளை திறந்தே வையுங்கள்.காசு புழங்கும் இடத்தில் இருக்கிறீர்களா?கையுறைகளை பாவியுங்கள் அல்லது அடிக்கடி hand sanitizer பாவித்துக்கொள்ளுங்கள். அலுவலக கதவுகளின் கைப்பிடிகள், மேசை மேற்பரப்புகளை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.

நோய்த்தொற்றுக் கிருமிநாசினி விசிறிய பின்னர் தான் வேலைக்கு செல்வேன் என எண்ணாதீர்கள். அங்கு விசிறப்படுவது குளோரின் கரைசல் அது நன்மைகளை விட ஒவ்வாமை, தோல் அரிப்பு , ஆஸ்துமா போன்ற நிலைகளை ஏற்படுத்தலாம். அவ்வாறே கிருமிநாசினி தெளிக்கும் கூடாரங்கள் இருந்தாலும் அதன் அருகில் கூட செல்ல வேண்டாம்.
தொழில் செய்யும் இடத்தில் கிருமி தொற்றிலிருந்து பாதுகாப்பு என்பது உங்கள் உரிமை. அதை உறுதி செய்து கொள்ள வேண்டியது உங்கள் கடமை. மேலதிக சந்தேகங்கள் இருந்தால் சுகாதார அமைச்சு வெளியிட்ட Operational guidelines on preparedness and response for COVID 19 outbreak for work setting எனும் கைநூலினை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -