அம்பாறையில் இயல்புநிலை படிப்படியாக திரும்புகிறது. அலுவலகம் பஸ்போக்குவரத்து பகுதியளவில் ஆரம்பம்.


காரைதீவு சகா-
ன்று(11) திங்கட்கிழமை ஊரடங்குச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து அம்பாறை மாவட்டம் இயல்புநிலைக்குத் திரும்பியதுபோன்று தென்பட்டது.

அரச அலுவலகங்கள் பகுதியளவில் நடைபெற்றதன. சில அலுவலகங்களுக்கு செல்லமுதல் உடல்வெப்பநிலை கணிப்பிடப்பட்டு பதியப்பட்டபின்னர் கைகழுவவேண்டும்.அதன்பின்னரே விடயத்தைப்பொறுத்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் வழமைபோன்று மக்கள் வீதிகளில் பெருமளவில் நடமாடவில்லை. மக்கள் பெரும்பாலும் வீடுகளில் முடக்கப்பட்டு பழக்கப்பட்டதாலோ என்னவோ வெளி நடமாட்டத்தைத் தவிர்த்துக்கொண்டனர்.
மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதை பெரிதாக எதிர்பார்க்கவில்லை. ஊழியர்களும் அதேபோன்று கடமைக்குச்செல்வதை விரும்பாததுபோன்று காணப்படுகின்றனர். பலருக்கு உளவள ஆலோசனையும் வழிகாட்டலும் அவசியம்போன்று தெரிகிறது.
பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. மீன்வியாபாரமும் சுமாராக நடைபெற்றது. நண்பர்கள் அநாயாசமாக கூடி கதைப்பதையும் காணமுடிந்தது.
அரச தனியார் பஸ்போக்குவரத்தும் இடம்பெற்றது. இரட்டை ஆசனத்தில் ஒருவர் வீதம் பயணிப்பதைக்காணமுடிந்தது. எனினும் வழமையான கட்டணமே அறவிடப்படுகிறது.

இதேவேளை வீதியோர அங்காடிக்கடைகள் களைகட்டியது. மக்கள் அங்கு பொருட்களைக்கொள்வனவு செய்வதில் கரிசனை செலுத்தினர். வெப்பம் கூடிக்காணப்படுவதால் பழவகைகளை மக்கள் கொள்வனவுசெய்வதில் ஆர்வம் செலுத்தினர்.

சிலபகுதிகளில் காலையில் சில உணவகங்கள் திறந்துவைக்கப்பட்டன. எனினும் 10மணியளவில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் வந்து மூடுமாறு அறிவுறுத்தியதன் பிரகாரம் சடுதியாக இழுத்து மூடப்பட்டன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -