புகழ் நிறைந்த அல்லாஹ்வின் அருள் உலகெங்கும் பரவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை


எம்.ஜே.எம்.சஜீத்-
புனித ரமழான் மாதமானது முஸ்லிம்களது வாழ்வில் இறையுணர்வுலு பூத்துக் குலுங்கும் ஓர் மாதமாகும். இது அவர்களின் செய்கையால் சாதிமதம் தாண்டி பூமிக்கு அருள் கிடைக்ககூடிய காலமாகும். ஆண்டாண்டு தோறும் ரமழான் என்ற அற்புதத்தை
முஸ்லிம்களாகிய எல்லோரும் சுவைத்துக் கொண்டே வந்தோம்.

அண்மைக்காலமாக சிற்சில அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் இறைபணியை இதமாக சுமந்து பங்காற்றி வந்த எமக்கு 2020 பெரும் பேரிருளாகவே அமைந்தது. கொரோணா எனும் கொடிய வைரஸ் தாக்கத்தினால் உலகமே செய்வதறியாது திகைத்து நிற்கையில் ரமழானை நாம் சந்தித்தோம். பள்ளிகள் தோறும் இறையருள் பொங்கி சோபனமாய் இருந்த காலம் நிலைகுலைந்து போய் வீடுகளெல்லாம் பள்ளிகளாக மாறிய தருணமிது இருந்தாலும் சோதனைகளும் இடர்பாடுகளும் இஸ்லாமிய வாழ்வியலிலும் வரலாறுகளிலும் பழகிப் போனவை.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வகையான இன்னல்களைச் சந்திக்கும் போதுதான் நமது ஈமான் பலப்படும் நமது சமூகம் எல்லா வகைகளிலும் நெருப்பில் இடப்பட்ட பொன்னாக ஒளிரும் ஒரு விடயமாகவே இந்த இன்னலை நான் பார்க்கிறேன்.

அன்பான இஸ்லாமிய சகோதர்களே ரமழான் அல்லாஹ்வின் கட்டளைகளின் பிரகாரம் ஐம்புலங்களையும் அடக்கித் தவமிருந்து வரலாற்றில் ஒரு நாளும் கண்டிராத பெருநாளை அடங்கு நிலையில் அனுபவிக்கிறோம். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

 இத்தனை பொறுமைகளுக்குமான கூலி இன்ஷா அல்லாஹ் மறுமையில் விளையும் என்ற நம்பிக்கையோடு நமது நாட்டில் சகல இன மக்களுக்கு தத்தமது மதச் சுதந்திரத்துடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -