வவுனியா சுகாதார தொண்டர்கள் வைத்திய கலாநிதிதி சிவமோகன் அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள்



வுனியா சுகாதார தொண்டர்கள் இன்று (23) காலை பதினொரு மணியளவில் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்

இந்த கலந்துரையாடலின் போது யுத்தகாலத்திலும் வேதனம் எதுவும் பெறாமல் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றி வந்த பலருக்கு அரச நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமல் புதிதாக இணைந்தவர்களுக்கும் வன்னியில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் சிபாரிசு உள்ளவர்களுக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் முன்னாள் வடக்கு மாகான ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளாலும் எதுவும் நடக்கவில்லை நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வரும் சுகாதார தொண்டர்களுக்கு நல்ல முடிவை பெற்றுத் தருமாறு விண்ணப்பத்தினையும் கையளிதிதருந்தார்கள்

விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளளேன் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்காமல் போனதற்கு அரசியல் குழப்ப நிலை அதற்கு ஒரு காரணம் என்றாலும் தற்போது வடக்கு மாகானத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அளுநர் இதற்கு நல்ல தீர்வை தருவார் என்று நம்பிக்கை உள்ளதாக வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -