பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவரை பொகவந்தலாவை பொலிஸார் நேற்று (03) இரவு ஏழு முப்பது மணி அளவில் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பினை; மேற்கொண்ட போலிசார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டு இருந்தேன் 16 கால் போத்தல் சாராயம் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் கால் போத்தல் சாராயம் ஒன்று சுமார் ஐநூறு ரூபா தொடக்கம் 600 ரூபா வரை விற்பனை செய்ய படுவதாக போலிசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணை மூலம் தெரியவந்துள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஒன்பதாம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை; பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்