தோட்டப்பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்


தொற்று நோய் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவிப்பு
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லையகப்பகுதியில் மக்கள் தொடர்குடியிருப்புகளிலேயே வாழ்கின்றனர்.வீடுகளும் மிக நெருக்கமாகவே காணப்படுகின்றன.இந்நிலையில் இந்த கொவிட் 19 வைரஸ் தொற்று இப்பிரதேசத்தில் யாருக்காவது ஏற்பட்டால் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே நாம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் இதுவாகும.; எனவும் கொழும்பு மற்றும் அவதானப்பகுதிகளில் இருந்து மலையகம் நோக்கி பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகைதந்துள்ளனர்.1200 பேர் மேலும் வர இருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.இவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தான் இங்கு வந்தார்களா என்பது நமக்கு உறுதிசெய்ய முடியாது. அதேநேரம் கோவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கின்றதா என்பதும் தெரியாது. சில வேலைகளில் இவர்கள் தொற்று ஏற்பட்ட நோயாளர்களுடன் பழகியிருக்கலாம். பஸ்ஸில் வரும் போது தொற்று ஏற்பட்ட நோயாளர்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம.; ஆகவே இது தொடர்பாக மிக அவதானமாக செயற்படவேண்டியது எமது அனைவரினதும் பொறுப்பாகும்.எனவே இவர்களை 14 நாட்களுக்கு முறையான விதத்தில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த வேண்டும். எனவே நாம் மிகவும் செயற்பட வேண்டிய காலயம் இதுவாகும். என நுவரெலியா மாவட்ட தொற்றுநோய் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து மலையகம் நோக்கி வந்தவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்று (10) ம் ;திகதி பகல் 2.30 மணியளவில் அட்டன் டி.கே.டபிள்யு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் கடற்படை ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியதன் காரணமான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவெகுவாக அதிகரித்தது.அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த பகுதியிலும் ஏற்படலாம்.ஆகவே இந்த தனிமைப்படுத்தும் விடயங்களை வெறுமனே பொதுசுகாதார உத்தியோகத்தர்களால் மாத்திரம் செய்துவிட முடியாது அதற்கு ஏனையவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனவே தான் இங்கு நாங்கள் அனைவரையும் அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுகிறோம்.இதேநேரம் கோவிட் 19 என்ற வைரஸ் காற்றின் மூலம் மலம் மூலமும் பரவுகிறது என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.இது துணிக்கைகள் மூலம் பரவுவதால் தொடுகையின் மூலம் கண்ணில் அல்லது மூக்கில் தொடுவது மூலமே பரவுகிறது அல்லது துணிக்கைகள் மூலம் தான் பரவுகின்றன.ஆகவே தான் முகக்கவசம் அணியவேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல்ல அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தோட்ட வைத்தியர்கள் பொலிஸ உத்தியோகஸத்தர்கள்,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார உத்தியோகஸத்தர்கள் சுகாதார கல்வி அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -