கிழக்கில் பாடசாலை மீளஆரம்பிப்பது தொடர்பில் கருத்துகள் ஆலோசனைகள் சமர்ப்பிக்கலாம்.மாகாணகல்விப்பணிப்பாளர் வேண்டுகோள்.


காரைதீவு நிருபர் சகா-
கொரோனா பீதியையடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை கிழக்கு மாகாணத்தில் மீளத்திறப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு கருத்துத்தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்.
பாடசாலைகளை மீளத்திறப்பது தொடர்பிலான கருத்துக்கள் ஆலோசனைகள் மேலும் திறந்தபின் எவ்வாறு பாடசாலைகள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பது தொடர்பிலும் கருத்துக்களை முன்வைக்கமுடியும் என அவர் கேட்டுள்ளார்.
ஆரோக்கியமான கருத்துக்களை மாகாண கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் info@eastpde.edu.lk அல்லது முகநூலில் pde@ eastpde.edu.lk பதிவிடலாம்.
நாளை(6) புதன்கிழமை கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.சித்ரானந்தா கிழக்கிற்கு விஜயம்செய்வது மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாடவிருப்பது தெரிந்ததே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -