மக்கள் பாதுகாப்பு கருதி வியாபார உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும், நோன்பு பெருநாள் வரவுள்ள நிலையிலும் மக்கள் பாதுகாப்பு கருதி வியாபார உரிமையாளர்கள் சேவை செய்யும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் விசேட ஒன்றுகூடல் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.எஸ்.எம்.வசீம், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸ் உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஓட்டமாவடி சிகையலங்காரம் மற்றும் ஆடை வியாபார நிலைய உரிமையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது நோன்பு பெருநாள் வரவுள்ளமையால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள சிகையலங்கார உரிமையாளர்கள் மற்றும் ஆடை வியாபார நிலைய உரிமையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வியாபார நிலையங்களின் மக்கள் ஒரு மீற்றர் இடைவெளியினை வேணும் வகையில் செயற்பட வேண்டும்.

அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிகையலங்கார உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு முடிகளை மாத்திரம் வெட்ட வேண்டுமே தவிர முகச்சவரம் செய்ய முடியாது என்ற சுற்று நிருபத்திற்கு ஏற்ப தங்களது கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள சிகையங்கார நிலையம் என்பவற்றினை ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோரினால் பரிசோதனைகளை மேற்கொள்ளப்படும் போது விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -