அரவிந்தகுமார் மீது சேறுபூசுவதற்காகவே சமூக வலைத்தளங்கள் கருத்து பகிரப்படுவதாக மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் அரவிந்தகுமார் மீது தற்போது சமூக வளைத்தளங்களில் சேறு பூசும் விதமாக கருத்துக்கள் பறிமாறப்பட்டு வருகின்றன.இதில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சதியென மலையக மக்கள் முன்னணியின் செயலாளர்நாயகம் லோறன்ஸ் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் அட்டன் பிரதான அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் அவர்கள் அரசாங்கம் வழங்கும் 5000 கொடுப்பனவில் சில அதிகாரிகள் பாலியல் லஞ்சம் கோருவதாகவே தெரிவித்திருந்தார்.ஆனால் சிலர் அதனை திரிபுபடுத்தி சமூக ஊடகங்களின் ஊடாக அவருக்கு சேருபூசும் விதத்தில் கருத்துக்களை பறிமாறி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் அவருக்கு இருக்கும் நல்லபெயரை கலங்கப்படுத்தி அதில் குளிர்காயவே விரும்புகின்றனர்.
அரவிந்தகுமார் அவர்கள் பாராளுமன்றத்திலும் பதுளை மாவட்டத்திலும் மக்களுக்காக சேவைசெய்வதன் காரணமாக அவர் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் இவருக்கு எதிராக இவ்வாறான ஒரு சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.மலையக மக்கள் முன்னணி ஆரம்பம் முதல் இன்றுவரை தனிநபருக்கு சேறுபூசும் விதத்தில் ஒருபோதும் விமர்சித்து வந்த கட்சியல்ல அது காலம்காலமாக மிகவும் நாகரீகமான முறையில் விமர்சனங்களை முன்வைத்த கட்சி என்பதால் இவ்வாறான விடயங்களுக்கு மலையக மக்கள் முன்னணி என்ற ரீதியில் எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.அரவிந்தகுமார் கூறியது இது ஒரு முதல் தடவையான வார்த்தையல்ல இதற்கு முன் நுண்கடன் தொடர்பாக அப்பகுதியில் பாலியல் லஞ்சம் கோருவதாக அப்போது ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்தன எனவே இது ஒரு பாரிய விடயமல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -