கல்முனை மாநகர சபையின் பொறியியலாளராக சாஹிர் கடமையேற்பு


அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் பகுதி நேர பொறியியலாளராக, கட்டிடங்கள் திணைக்களத்தின் அம்பாறைப் பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் பொறியியலாராக கடமையாற்றிய சர்வானந்தன் அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து, கிழக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் அம்பாறைப் பிராந்திய பிரதம பொறியியலாளராக கடமையாற்றி வருகின்ற பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் அவர்கள் அதற்கு மேலதிகமாக இங்கு பகுதி நேர பொறியியலாராக கிழக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் இன்று புதன்கிழமை (27) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், வேலைகள் அத்தியட்சகர் வீ.உதயகுமார், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உட்பட பொறியியல் மற்றும் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, இவரது நியமனம் தொடர்பில் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்த மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், மாநகர சபையின் பொறியியல் பிரிவு எதிர்காலத்தில் வினைத்திறனுடன் இயங்குவதற்கு இவர் முக்கிய பங்காற்றுவார் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

முன்னர் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீடு மூலம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கான பொறியியலாராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்றும் மாநகர முதல்வர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.வித்தியாலயம், கல்முனை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் பொருளாளர் மர்ஹூம் கே.எம்.பி.ஆதம்பாவா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -